Ads (728x90)

நாடு மீண்டும் கடன்படாதிருக்க ஏற்றுமதி பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகச் சுயேச்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

நாடு மீண்டும் கடன்படாதிருக்க ஏற்றுமதி பொருளாதாரத்தை மேம்படுத்தப் போகின்றோமா அல்லது கடன்பட்டு மீண்டும் வீழ்ச்சியடையப் போகின்றோமா?

முன்னாள் விவசாய அமைச்சர் அநுரகுமார திஸாநாயக்க வரியை இல்லாதொழிப்பதாக கூறுகின்றார். அவ்வாறு வரியை நீக்குவதன் மூலம் மீண்டும் இரண்டு வருடங்களுக்கு முன்னதாக நாம் எதிர்கொண்ட நிலைமையை அடையப்போகின்றோம்.

இன்னும் இரண்டு வாரங்களில் மேலும் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்வதற்கு நாம் தயாராகி வருகின்றோம். இவர்கள் எந்தவொரு பலமுமின்றி ஆட்சியை மாத்திரம் கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றனர்.

தற்போதுள்ள வரி முறைமையை நீக்குவதன் மூலம் மீண்டும் புதிதாகப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். அதே போன்று மீண்டும் வரிசை யுகத்திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget