Ads (728x90)

தனது ஆட்சியின் கீழ் இனவாதம், மதவாதம் ஆகியவற்றுக்கு இடமில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

"ஆரம்பத்திலேயே பல மாற்றங்களை காட்ட வேண்டும். இலங்கையில் புதிய அரசியலை உருவாக்குவோம். நாட்டில் இனவாதம், மதவாதத்திற்கு இடமளிக்க மாட்டோம். இதற்குப்பிறகு இலங்கையில் மத மோதல்கள் இருக்க முடியாது."

இலங்கை கடனாளி நாடாக மாறியதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே காரணமெனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை ஒரு ஏழ்மை நாடு என்பதைப் போன்றதொரு விம்பத்தையே உலக நாடுகளிடையே ஆட்சியாளர்கள் தோற்றுவித்துள்ளனர்.

இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்பட்ட நாடு. 2,300 வருட வரலாற்றைக் கொண்டதொரு நாடு. இன்று உலக நாடுகளின் கடனை செலுத்த முடியாத, கடனை பெற முடியாத நாடாக மாறியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget