Ads (728x90)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதோடு, பிரதான சூத்திரதாரிக்கு தகுதி தராதரம் பாராது தண்டனையைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்குமிடையில் நேற்று கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நியமிக்கப்படுகின்ற நீதிமன்ற கட்டமைப்புக்கு தாம் தோள் கொடுப்பதாகவும், நீதிமன்ற கட்டமைப்பை மேலும் உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், இதற்காக மேற்கொள்ள வேண்டிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்துவோம் என்றும் அவர் அங்கு வாக்குறுதியளித்துள்ளார்.




Post a Comment

Recent News

Recent Posts Widget