Ads (728x90)

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் எனவும், இப்பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் வாக்குச் சாவடி மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளை செப்டம்பர் 19 ஆம் திகதி பாடசாலை நேரம் முடிந்த பின்னர் கிராம அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளுக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தொடர்புடைய காலங்களில் மட்டுமே விடுமுறை வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


 

Post a Comment

Recent News

Recent Posts Widget