தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருக்கு 36 வீத ஆதரவும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருக்கு 32 வீத ஆதரவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு 28 வீத ஆதரவும் காணப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்கவிற்கான ஆதரவு மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் அதிகரித்து வந்துள்ளது. ஏனைய வேட்பாளர்களிற்கான ஆதரவு சிறிதளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
எங்களின் ஆகஸ்ட் மாத கருத்துக்கணிப்பு போட்டி கடுமையானதாக காணப்படுவதை வெளிப்படுத்தியுள்ளது, எந்த வேட்பாளரும் அரைவாசி வாக்குகளை கூட பெறமாட்டார்கள் என ஐஎச்பியின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி ரவி ரண்ணன் எலிய தெரிவித்துள்ளார்.
2024ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலே இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் இலங்கையின் முதலாவது ஜனாதிபதி தேர்தலாக அமையலாம் என தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வாக்கும் அதன் முக்கியத்துவத்தை பெறுவதற்காக வாக்காளர்களிற்கு அறிவுறுத்தும் செயற்பாடுகளில் தேர்தல்கள் ஆணைக்குழுவும், சிவில் சமூகமும் ஈடுபடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Post a Comment