Ads (728x90)

ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்திற்கு மாத்திரமே வாக்களியுங்கள். ஏனையவர்களுக்கு விருப்பு வாக்கு போட வேண்டாம் என தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

எட்டு மாவட்டங்களிலும் எமது பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எதிர்பார்த்த வாக்குகளை விட அதிக வாக்குகள் எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு வந்துள்ளது. 

மக்களிடம் நாம் சங்கு சின்னத்திற்கு மாத்திரம் வாக்களிக்க வேண்டும் என்றே கோரி வருகிறோம். ஆனால் சிலர் சங்கு சின்னத்துக்கு வாக்களித்த பின்னர் விரும்பிய மற்றைய வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு சிலர் கூறுகின்றனர். இது எனதோ பொது கட்டமைப்பை சார்ந்தவர்களுடைய கருத்தோ இல்லை. 

தற்போதைய நிலவரப்படி எவருமே 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற முடியாத நிலைமை காணப்படுகிறது. அதனால் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் வடக்கு - கிழக்கில் முகாமிட்டு பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். 

அவர்களுக்கு முகவர்களாக சில தமிழர்கள் செயற்படுகின்றனர். எமது இனத்திற்காக அவர்கள் சிந்தித்து சங்கு சின்னத்திற்கு ஆதரவு வழங்க முன் வரவேண்டும் என மேலும் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget