Ads (728x90)

சென்னை விமான நிலையத்துக்கும், யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்துக்கும் இடையில் இண்டிகோ ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய விமான சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை  ஆரம்பமானது.

சென்னையிலிருந்து பலாலி வரையில் குறித்த விமானச் சேவை நாளாந்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக இண்டிகோ ஏயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையிலிருந்து பயணத்தை ஆரம்பித்த இண்டிகோ ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய விமானமானது 52 பயணிகளுடன் நேற்று பிற்பகல் பலாலியை வந்தடைந்தது.

பின்னர் பலாலியில் இருந்து சென்னை நோக்கி பயணத்தை குறித்த விமானம் ஆரம்பித்தது. பலாலியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் 74 பயணிகள் பயணத்தை மேற்கொண்டனர். விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் யாழ்ப்பாண உற்பத்திகள் வழங்கப்பட்டன.

இதன் ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ். இந்திய துணை தூதுவர் சாய் முரளி, இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், விமானப்படை அதிகாரிகள், பதவிநிலை அதிகாரிகள், பயணிகள் என பலர் கலந்து கொண்டனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget