கடந்த 09 ஆம் திகதி நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நாளை தீர்த்தோற்சவம் மற்றும் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுக்கு வருகிறது.
இந்நிலையில் இன்றைய தேர்த்திருவிழாவில் ஆறுமுகப்பெருமான் அருளொளி வீசும் கம்பீரமான தோற்றத்துடனும், எல்லையில்லாக் கொள்ளை அழகு தரிசனமும் நல்லூரானின் சிறப்பாகும்.
நல்லூர் உற்சவத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலிருந்து மாத்திரமல்லாது தென்னிலங்கையில் இருந்து அதிகளவு வர்த்தகர்கள் தமது வியாபார நடவடிக்கையினை நல்லூர் சூழலில் முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment