Ads (728x90)

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க தெரிவானதைத் தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்‌ஷ்மன் நிபுண ஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2020 தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் கொழும்பு தேர்தல் மாவட்டத்திற்கு ஒரு பாராளுமன்ற ஆசனம் கிடைத்தது. அதற்கமைய குறித்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் விருப்பு வாக்குகளை பெற்ற லக்‌ஷ்மன் நிபுணாரச்சியை குறித்த பதவிக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தேர்தல் ஆணைக்குழுவால் வௌியிடப்பட்டுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget