Ads (728x90)

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமார திசாநாயக்கவிற்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

பெய்ஜிங்கில் இருந்து அனுப்பிய செய்தியில் சீன ஜனாதிபதி 67 ஆண்டுகளுக்கும் மேலாக செழித்தோங்கியிருக்கும் சீனாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான வலுவான இராஜதந்திர உறவுகளை எடுத்துரைத்துள்ளார்.

இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் விரிவுபடுத்தியுள்ள பரஸ்பர புரிதல் மற்றும் ஆதரவை அவர் பாராட்டினார். பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் சீன பட்டுப்பாதை முன்முயற்சியின் கொள்கைகளில் அடித்தளமாக இருக்கும் மூலோபாய கூட்டுறவு கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை ஜனாதிபதி ஷி ஜின்பிங் வெளிப்படுத்தியுள்ளார்.

சீனா-இலங்கை உறவுகளின் வளர்ச்சிக்கு நான் அதிக முக்கியத்துவம் அளித்து, நமது பாரம்பரிய நட்புறவை கூட்டாக முன்னெடுத்துச் செல்வதற்கு உங்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget