Ads (728x90)

2024 ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் இணைந்து உருவாக்கப்பட்ட "பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி"யின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை பத்தரமுல்லை வோட்டர் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் கிண்ணம் சின்னத்துடன் "பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி" என்ற புதிய முன்னணி ஆரம்பிக்கப்பட்டது.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த புதிய கூட்டணிக்கு அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்தே இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget