Ads (728x90)

தம்மைத் தவிர ஏனைய அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் தம்மைச் சூழவுள்ள அரசியல் குழுக்களால் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ள கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாது என சர்வஜன அதிகார ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

அரச சேவையாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக சில வேட்பாளர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவே முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அவசியமான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என தாம் யோசனை முன்வைப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாரம்பரிய அரசியலில் ஏற்பட்ட அனைத்து தவறுகளையும் சரி செய்யக்கூடிய ஒரு மூலோபாய வேலைத்திட்டத்தை உருவாக்குவதற்கு தாம் மிகவும் கடினமாக உழைத்துள்ளதாகவும் திலித் ஜயவீர மேலும் தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற சிநேகபூர்வ சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சம்பளம் கொடுக்க வழியில்லை என்று தற்போதைய ஜனாதிபதியே இரண்டு மாதங்களுக்கு முன்பு கூறினார். சம்பளம் கொடுக்க வழியில்லை என்று சொன்ன அதே அரசு 25% சம்பளத்தை உயர்த்தியுள்ளது. அதற்கு 2 பில்லியன் ரூபாய்க்கு மேல் தேவை. இதை எப்படி நம்புவது?

இது அறிவுள்ள அரச ஊழியரை அவமதிக்கும் செயலாகும். தர்க்கரீதியாக ஊதியம் உயர்த்தப்பட வேண்டும்.

அனுரகுமார 6 மாதங்களுக்கு ஒரு முறை சம்பளத்தை அதிகரிக்க முன்மொழிகிறார். அது எப்படி நடக்கும்? பணம் எங்கிருந்து வரும்?

திறமையான பொதுச்சேவைக்காக அரச ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்.

நன்றாக வேலையைச் செய்யும் ஒருவருக்கு அதிக ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த விடயங்கள் முழுமையான வாக்குறுதிகள் மட்டுமே. இலங்கையின் பொருளாதாரம் பற்றிய புரிதல் உள்ளவர்கள் உயர்தரத்தில் பொருளாதாரம் படிக்கும் மாணவர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்வார் இது நிறைவேற்றக் கூடிய வாக்குறுதி அல்லவென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget