Ads (728x90)

இன்று இரவு 10.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு அமைய ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹல் தல்துவ தெரிவித்தார்.

நாட்டில் மிகவும் அமைதியான சூழல் நிலவுகின்ற போதிலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் தமது வீடுகளிலேயே நேரத்தைச் செலவிடுமாறும் கோரப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்படும் அடையாள அட்டைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்களாக பயன்படுத்தப்படலாம்.

வெளிநாட்டிற்குச் செல்வதற்காக விமான நிலையம் செல்லும் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்து விமான நிலையத்திலிருந்து வெளியேறும் அனைவரும் தங்கள் விமான டிக்கெட் அல்லது ஆதார ஆவணங்களை ஊரடங்குச் சட்ட அனுமதிப் பத்திரமாகப் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget