Ads (728x90)

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகிய வாக்குப்பதிவு மாலை 4.00 மணிக்கு நிறைவடைந்தது.

நாடளாவிய ரீதியில் 13,421 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற அதேவேளை, இம்முறை 1 கோடியே 71 இலட்சத்து 40ஆயிரத்து 352 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மாலை 7 மணிக்கு வாக்குகளை கணக்கெடுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி இன்று பிற்பகல் 4.00 மணி வரையான காலப்பகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு, 

கொழும்பு - 80%

கம்பஹா - 80%

நுவரெலியா - 80%

இரத்தினபுரி - 75%

பதுளை - 73% 

மொனராகலை - 77%

அம்பாறை - 70%

புத்தளம் - 78%

திருகோணமலை - 63.9%

கேகாலை - 72%

கிளிநொச்சி - 68%

குருநாகல் - 70% 

பொலன்னறுவை - 78%

அனுராதபுரம் -70 %

திருகோணமலை -60 %

யாழ்ப்பாணம் - 65.9%

மாத்தளை - 68%

கண்டி - 65%

முல்லைத்தீவு -57%

வவுனியா - 62%

மட்டக்களப்பு - 48 %


Post a Comment

Recent News

Recent Posts Widget