வெளிநாட்டிவர்கள் இப்போது ஒன்லைனில் விசா பெறுவதற்கு எளிதாக விண்ணப்பிக்கலாம். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் விசா வழங்கப்படும்.
விசா வழங்கும் நடைமுறை தொடர்பான சமீபத்தைய விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் விசா வழங்கும் நடைமுறையில் காணப்பட்ட சவால்களிற்கு தீர்வை காண்பதற்கு கடந்த 24 மணிநேரத்தில் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
விஎவ்ஸ் குளோபலின் விசா நடைமுறை பலருக்கு குறிப்பிடத்தக்க பிரச்சினைகளை ஏற்படுத்தியது குறிப்பாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment