Ads (728x90)

ஓவியரான பூமாலை என்கிற அட்டக்கத்தி தினேஷ் உள்ளூரில் நடைபெறும் ரப்பர் பந்து கிரிக்கெட் போட்டிகளில் அதிரடி ஆட்டக்காரர். எங்கு கிரிக்கெட் போட்டி நடந்தாலும் ஆஜராகிவிடுவார்.

அதே ஊரில் பந்துவீச்சில் பூமாலையை, திணறடிக்கிறார் ஹரிஷ் கல்யாண். இதனால் இருவருக்கும் ஈகோ வளர்கிறது. இதற்கிடையே பூமாலை மகள் துர்காவுக்கும், அன்புக்கும் காதல் மலர்கிறது. கிரிக்கெட் ஈகோவால் வளர்ந்த பகைக்கும், காதலுக்கும் இடையே என்னென்ன நடக்கிறது என்பது கதை.

கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள் வந்திருந்தாலும், கிராமங்களில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் என்னென்ன அலப்பறைகள் நடைபெறும் என்பதை அழகாகக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. கிரிக்கெட்டை வெறித்தனமாக நேசிக்கும் எளிய குடும்பத்து ஆண்களின் மனதைக் கச்சிதமாகப் படம் பிடித்துக் காட்டிய இயக்குநர் பாராட்டுக்குரியவர்.

தினேஷின் மனைவியாக வரும் சுவாஸிகா எளிய குடும்பத்து பெண்ணாக மனதில் நிற்கிறார். சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நேர்த்தியாக நடித்திருக்கிறார். நகைச்சுவைக்கு பாலசரவணனும், ஜென்சன் திவாகரும் உதவியிருக்கிறார்கள். காளி வெங்கட், தேவதர்ஷினி, டிஎஸ்கே, கீதா ஆகியோரும் தேர்ந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget