நாளை 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்திற்கு இணங்க தனியார் நிறுவனங்கள் அனைத்தும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் தனியார் துறை ஊழியர்களுக்கும் கீழ்க்கண்டவாறு தூரத்திற்கு ஏற்ப விடுமுறை அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
40 கிலோ மீற்றர் அல்லது அதற்கு குறைவாக இருந்தால் அரை நாள் விடுமுறை
40 - 100 கிலோ மீற்றர் வரை இருந்தால் ஒரு நாள் விடுமுறை
100 - 150 கிலோ மீற்றர் தூரம் என்றால் ஒன்றரை நாள் விடுமுறை
150 கிலோ மீற்றரிற்கு மேல் இருந்தால் இரண்டு நாட்கள் விடுமுறை

Post a Comment