தேர்தல் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
வாக்களித்ததன் பின்னர் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை பகிரங்கமாக சொன்னால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் அன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும், அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும் நிழற்படமெடுத்தல் மற்றும் வீடியோ எடுத்தல் அல்லது சமூக ஊடக வலைத்தளங்களில் வெளியிடுதல் தேர்தல் சட்டத்தை மீறும் செயல்கள் என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment