ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டியின் இறுதிப் போட்டி அக்டோபர் 20 ஆம் திகதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
10 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி மகளிர் ரி20 உலகக்கிண்ண தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ யில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி-யில் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்தியதீவுகள், வங்காளதேசம், ஸ்கொட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
இந்த நிலையில் மகளிர் ரி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. மகளிர் ரி20 உலகக் கோப்பைக்கான ஒட்டுமொத்த பரிசுத்தொகையாக இந்திய மதிப்பில் சுமார் 66.64 கோடி ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது. கோப்பையை வெல்லும் அணிக்கு ரூபா 19.60 கோடியும், ரன்னர் அப் அணிக்கு ரூபா 9.80 கோடியும், அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிக்கு ரூ.5.65 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment