Ads (728x90)

சோடியம் குளோரைடு என்ற உப்பு உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் மிகவும் தேவையானது. 

சோடியம் அதிகமாக எடுக்கும்போது உடல் தண்ணீரை அதிகமாகச் சேர்த்து வைத்துக்கொள்ளும். இதனால் உடலில் அனைத்து வகையான ஏற்றத்தாழ்வுகளும் ஏற்படும். உயர் இரத்த அழுத்தம் வர வாய்ப்புள்ளது. இரத்த அழுத்தம் அதிகமானால் அதைத்தொடர்ந்து மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவையும் வரலாம்.

அதேபோல் சோடியம் குறைந்தால் கோமா நிலைக்குச் சென்றுவிடுவார்கள். மூளைக்கு சோடியம் தேவை. அது கிடைக்கவில்லை என்றால் உடல் செயலிழந்துவிடும். மேலும் நாடித்துடிப்பும், இதயத்துடிப்பும் குறையும், தசைகள் பலவீனமாகும். 

அதனால் நம் உணவில் சோடியம் குறையவும் கூடாது, அதிகமாகவும் கூடாது. ஐந்து கிராம் உப்புதான் நம் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக உப்பு எடுத்துக்கொள்வதால் உடலில் அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படும்.

நாம் வெளியில் வாங்கிச் சாப்பிடும் சொக்லேட், பிஸ்கட் போன்ற அனைத்து பொருள்களிலும் உப்பு இருக்கும். குறிப்பாக ஹோட்டல்களில் விற்கப்படும் அசைவ உணவுகளில் காரம், மசாலா, உப்பு என அனைத்துமே வீட்டு உணவைவிட அதிகமாகவே இருக்கும். 

நம் அன்றாட வாழ்வில் உப்பு அதிகமானதற்கு, வெளியில் உணவு சாப்பிடும் பழக்கம் அதிகரித்ததும் மிக முக்கிய காரணம். இதனால்தான் இளம் வயதினர் உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். 

ஒருவருக்கு இரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்தாலே அவர் நிச்சயமாக தங்கள் உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் வெளியில் சாப்பிடுவதைக் குறைக்க வேண்டும். முக்கியமாக ஊறுகாய் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். 

உணவுப் பொருள்களில் சோடியம் அதிகமாக இருந்தால் எந்த நுண்ணுயிரிகளும் அதைத் தாக்காது என்பதால் உணவு பதப்படுத்தலுக்கு உப்பு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. எனவே இது போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். 


Post a Comment

Recent News

Recent Posts Widget