மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. 51 பேர் பங்கேற்ற இந்த போட்டியில் குஜராத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ரியா சிங்ஹா மகுடம் சூட்டினார்.
அவருக்கு நடிகை ஊர்வசி ரவுட்டேலா மகுடத்தை அணிவித்தார். இந்த போட்டியில் பிரஞ்சல் பிரியா இரண்டாவது இடத்தையும், ஜாவி வெர்க் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
வெற்றி குறித்து ரியா சிங்ஹா கூறுகையில் நான் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2024 பட்டம் வென்றுள்ளேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் இந்த நிலையை அடைய கடினமாக உழைத்துள்ளேன்.
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்ற ரியா சிங்ஹா நவம்பர் மாதம் மெக்சிகோவில் நடைபெறும் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளார்.
Post a Comment