Ads (728x90)

2015 சர்ச்சைக்குரிய பிணை முறி விவகாரம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், தினேஷ் ஷாப்டர் மரணம் உள்ளிட்ட 7 வழக்குகளுக்கான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, பதில் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் தர்மரட்ணம் சிவராம் படுகொலை, காணாமல் போன லலித் குகன் உட்பட முக்கிய ஏழு சம்பவங்கள் குறித்து விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினருடனும், உரிய பொலிஸாருடனும் இணைந்து செயற்படுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு தரப்பு பதில் பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் பிரபல வர்த்தகர் தினேஸ் ஸ்காப்டரின் மரணம், வெலிகமவில் டபில்யூ 15 ஹோட்டலிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டமை குறித்தும் விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget