ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் தவிர, ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர், ரீத்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி என பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.
வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த ஒரு போலீஸ் அதிகாரியாக உள்ளார். காவல் துறையில் இவர் என்கவுன்டருக்கு புகழ் பெற்றதாலே இவருக்கு வேட்டையன் என்ற பெயரும் உள்ளது.
மறுபுறம் மனிதாபிமான கொள்கைகள் கொண்ட ஒரு நீதிபதியாக அமிதாப் பச்சனின் கதாப்பாத்திரம் உள்ளது. இவர்கள் இருவரும் ஒரு முக்கிய வழக்கை கையாள்கிறார்கள்.
மாறுபட்ட கொள்கைகள் கொண்ட இவ்விருவர் இந்த வழக்கை எவ்வாறு கையாள்கிறார்கள்? என்பதே இப்படத்தின் கதை.
படம் முதல் பாதி ஏதோ கிரைம் திரில்லர் போல் சென்று, அப்படியே சமூக பிரச்சினையை எடுத்த விதம், அதிலும் ரஜினி போல் ஒரு உச்ச நட்சத்திரம் இந்த கதையை செய்தது சபாஷ். அதே நேரத்தில் ராணா வழக்கமான கார்ப்ரைட் வில்லன் போல் வந்து செல்வது இரண்டாம் பாதி கொஞ்சம் நார்மல் கமர்ஷியல் படமாகவே கடந்து செல்ல முடிகிறது.
படத்தின் மிகப்பெரும் பலம் டெக்னிக்கல் விஷயங்கள், அனிருத் பின்னணி இசை ரஜினியின் மாஸ், அமிதாப்-ன் க்ளாஸ் என அனைத்திலும் ஸ்கோர் செய்துள்ளார். கதிர் ஒளிப்பதிவு ஒரு சூப்பர் ஸ்டார் படத்தை எவ்வளவு ரியாலாக காட்ட முடியுமோ காட்டியுள்ளார்.
Post a Comment