Ads (728x90)

பலவந்தமாக காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களிற்கு என்ன நடந்தது என்பதை ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவின் புதிய அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஜெனீவாவிற்கான பிரதி இயக்குநர் லூசி மக்கேர்னன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தும், கடந்தகால அட்டுழியங்களிற்கு நீதியை தேடும் முயற்சிகளிற்கு இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானம் மிகவும் அவசியமானது.

பாதிக்கப்பட்டவர்களிற்கும், அவர்களது குடும்பத்தவர்களிற்கும் நீதி மறுக்கப்படுவது தொடர்ந்தால் இலங்கை தொடர்பில் சர்வதேச நடவடிக்கை அவசியம்.

பலவந்தமாக காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களிற்கு என்ன நடந்தது என்பதை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் புதிய அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும். 

நீதியை தேடும் பாதிக்கப்பட்டவர்களை மனித உரிமை செயற்பாட்டாளர்களை பாதுகாப்பு படையினர் துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும், முன்னைய அரசாங்கங்களினால் தடுக்கப்பட்ட குற்றங்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget