Ads (728x90)

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் சுயேட்சைக் குழுவாக இப்புதிய கட்சி போட்டியிடவுள்ளது.

இதில் தமிழரசுக் கட்சியில் அதிருப்பியடைந்துள்ளவர்கள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் எனப் பலரையும் உள்ளடக்கி இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்பு மனுவை நாளை காலை 9 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்யவுள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் இந்தச் சுயேச்சைக் குழுவுக்கான வேட்பாளர்கள் வேட்புமனுவில் இன்று வியாழக்கிழமை மாலை கையொப்பமிட்டுள்ளனர்.

இதில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், முன்னாள் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் த.ஐங்கரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன், தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் விமலேஸ்வரி, முன்னாள் போராளி வைத்திலிங்கம் பாலசுரேஷ் உள்ளிட்ட 9 பேர் கையொப்பமிட்டனர்.

இக்கட்சியின் உருவாக்கம் மற்றும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் அதன் தலைவரான ஐனாதிபதி சட்டத்தரணி தவராசா இன்றைய ஊடக சந்திப்பில் தெளிவுபடுத்தியிருந்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget