அரசாங்கம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விசாரணைகள் பூர்த்தியான பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இரண்டு அறிக்கைகளும் அரசியல் நோக்கத்துடனேயே வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2019 இல் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவும், உயர்நீதிமன்றமும் இரண்டு புலனாய்வு உத்தியோகத்தர்கள் மீது எந்த குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை.
உரிய புலனாய்வு தகவல்கள் கிடைத்த போதிலும் அவர்கள் அதனை தடுத்து நிறுத்த தவறினார்கள் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அவர்களை நஷ்ட ஈட்டை செலுத்துவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் எந்த இடத்திலும் ஷானி அபயசேகரவும், ரவி செனவிரத்னவும் குற்றவாளிகள் என தெரிவிக்கவில்லை.
ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரை தற்போதைய பதவிகளில் இருந்து எக்காரணம் கொண்டும் நீக்க அரசாங்கம் தயாராக இல்லை எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குழுவின் அறிக்கையை மேற்கோள்காட்டி குறித்த அதிகாரிகள் இருவரையும் இலக்கு வைத்து, அவர்களை தற்போதைய பதவிகளில் இருந்து நீக்குவதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் தேவையாக உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இரண்டு அதிகாரிகளின் பக்கச்சார்பற்ற தன்மையை உயிர்த்த ஞாயிறு தினத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கூட நன்கு அறிவார்கள் எனவும், பல்வேறு தேவைகள் உள்ள நபர்களுக்கு அவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
Post a Comment