உலகின் மிக பெரிய முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ராணுவ தளபதி பிரபோவோ சுபியாண்டோ 58 % அதிகமான வாக்குகளுடன் வெற்றி பெற்றார். 8 மாதங்களுக்கு பிறகு அதிபர் பதவியேற்பு விழா நேற்று நடந்தது.
பதவியேற்றதன் பின்னர் உரையாற்றிய அவர், நாட்டைப் பாதிக்கும் ஊழல் போன்ற உள் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதாகவும், மேலும் தன்னிறைவு பெற உழைப்பதாகவும் உறுதியளித்தார்.
இதற்கிடையே பதவி விலகும் ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் 37 வயது மகன் ஜிப்ரான் ரகாபுமிங் ரக்கா, சுபியாண்டோவுடன் நாட்டின் துணை அதிபராக பதவியேற்றார்.
பிரபோவோவின் அமைச்சரவையில் 100க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் 48அமைச்சகங்கள் காணப்படுகின்றன. அதில் ஸ்ரீ முல்யானி இந்திராவதி மீண்டும் நிதியமைச்சராகவும், பஹ்லில் லஹடாலியா எரிசக்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.
ஒரு முன்னாள் இராணுவத் தளபதியான அவர், உரிமை மீறல்களில் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, தேர்தலில் வெற்றி பெற்று, 280 மில்லியன் மக்களைக் கொண்ட நாட்டை வழிநடத்துவது வரை குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளார்.
Post a Comment