இது தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமெரிக்கத் தூதுவர் இதனை தெரிவித்தார்
அறுகம்பை பகுதிக்கு விஜயம் செய்யும் போது அமெரிக்க பிரஜைகளுக்கு அவதானத்துடன் செயற்படுமாறு மாத்திரமே அறுவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்
அறுகம்பை பகுதியில் குறிப்பிட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் எச்சரிக்கை காணப்படுவதாக தகவல் கிடைத்த சந்தர்ப்பத்தில், அதனை இலங்கை அதிகாரிகளுடன் பகிர்ந்தோம்.
அத்துடன் தொடர்ச்சியாக அன்றாடம் இந்த விடயம் தொடர்பில் இலங்கை தலைமைத்துவத்துடனும் பாதுகாப்பு அதிகாரிகளுடனும் நாங்கள் கலந்துரையாடினோம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment