Ads (728x90)

தேசிய பாடசாலையில் பத்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய 9,000 ஆசிரியர்களை அடுத்த வருடம் முதல் இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி கொழும்பில் உள்ள பிரதான பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப் பரிந்துரைக்கப்பட்டு கடந்த வருடம் வரை அரசியல் அழுத்தங்களினால் இடைநிறுத்தப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும் இம்முறை வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்ய அமைச்சு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக கடந்த வருடமும், அதற்கு முந்தைய வருடமும் முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய அதிகாரியின் தலையீட்டினால் கொழும்பின் பிரதான பாடசாலைகளில் இவ்வாறான ஆசிரியர்களின் இடமாற்றத்தை அமைச்சு இடைநிறுத்த வேண்டியிருந்தது.

இடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் அனைத்து இடமாற்றங்களும் ஆசிரியர் இடமாற்ற சபையின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமுல்படுத்தப்படுவதாகவும், அவ்வாறு தீர்மானிக்கப்படும் இடமாற்றங்கள் இம்முறை எவ்வித செல்வாக்கும் இன்றி நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் கடந்த காலங்களில் இடமாற்றங்களை ஒழுங்கான முறையில் மேற்கொள்ள முடியாத காரணத்தினால் வெளிமாவட்ட ஆசிரியர்களும் நகரப் பாடசாலைகளுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget