முக்கிய கட்டமைப்பு மற்றும் கொள்கை மறுசீரமைப்புகள் ஆகியவற்றின் உதவியின் பிரகாரம் கைத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக நான்கு காலாண்டு காலப்பகுதியில் இந்த சாதகத் தோற்றப்பாடு தொடர்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் ஆண்டுக்கு இரு முறை வெளியீடான இலங்கை அபிவிருத்தி இற்றைப்படுத்தலில் (Sri Lanka Development Update - SLDU), எதிர்கால வாய்ப்புகள் என தலைப்பிடப்பட்ட இன்றைய வெளியீட்டில், அறவிடல் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாக காணப்படுவதாகவும், பேரினப் பொருளியல் நிலைபெறும் தன்மையை பாதிக்கக்கூடியதாக காணப்படுவதாகவும் எச்சரித்துள்ளது,
அத்தோடு கடனை வெற்றிகரமாக மீள்கட்டமைத்தல், மத்திய கால வளர்ச்சி மற்றும் வறுமையை குறைத்தல் ஆகியவற்றை அதிகரிப்பதற்கு தொடர்ச்சியான கட்டமைப்பு மறுசீரமைப்புகள் அவசியமாகும்.
ஏற்றுமதிகளை ஊக்குவித்தல், வெளிநாட்டு முதலீடுகளை கவருதல், பெண்கள் தொழிற்படை பங்களிப்புகளை மேம்படுத்துதல், உற்பத்தியை மேம்படுத்தல், மற்றும் வறுமை, உணவு பாதுகாப்பின்மை, நிதித் துறையில் காணப்படும் பாதிப்புறும் தன்மைகள் ஆகியவற்றினை பிரதான மறுசீரமைப்புக்களாக கொண்டு அதிகளவு அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலைபேறான வளர்ச்சி அடைவது அவசியமாகும்.
வியாபாரம் மூலம் உயர்வான மற்றும் நிலைபேறான வளர்ச்சியை அடைவதற்கான ஆற்றல்கள் நாட்டில் காணப்படுகின்றன என இவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
வருடாந்தம் 10 பில்லியன் டொலர் மதிப்பிடப்பட்ட பயன்படுத்தப்படாத ஏற்றுமதி சார் ஆற்றல்கள் இலங்கையிடம் காணப்படுகின்றன, இதன் மூலம் சுமார் 142,500 புதிய தொழில்களை உருவாக்கலாம். அவசியமான மறுசீரமைப்புகள் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் உற்பத்தித்துறை, சேவைகள், விவசாயம் ஆகியவற்றில் பல்வகையில் ஏற்றுமதிகளை விரிவாக்கம் செய்வதற்கான காத்திரமான வாய்ப்புகள் காணப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளது.
Post a Comment