Ads (728x90)

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் வெளியிட்ட கருத்துக்களை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க விமர்சித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டதாக விக்கிரமசிங்க கூறியிருந்தார்.

விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தால் ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. நீங்கள் தோற்றிருந்தால் தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் என்று விக்ரமசிங்கவின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

விக்கிரமசிங்க முன்னர் கூறியிருந்த போதிலும் தற்போதைய அரசாங்கம் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்துவதாக அவர் வலியுறுத்தினார். 

மூன்று அல்லது ஆறு மாதங்களுக்குள் அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்று கூறப்படும் கூற்றுக்களையும் திஸாநாயக்க மறுத்தார்.

தேசிய மக்கள் சக்தியின் முயற்சிகள் தொடரும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார், இந்த நாட்டிற்கான எங்கள் நோக்கம் நிறைவேறும் வரை நாங்கள் நிறுத்த மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget