Ads (728x90)

சோசலிச இளைஞர் சங்கத்தினால் 2022ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் மீதான பொலிஸாரின் தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக குறிப்பிடுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த போராட்டத்தில் பொலிஸார் தாக்குதல் நடத்தி கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நேற்று விசாரணைக்கு எடுத்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சோசலிச இளைஞர் சங்க உறுப்பினர்கள் குழுவினால் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதன்போது மனுதாரர் தரப்பின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த உயர்நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

சோசலிச இளைஞர் சங்கத்தால் மருதானையில் 2022 ஆம் ஆண்டு குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் போராட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மருதானை டீன்ஸ் வீதியில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 2 பௌத்த பிக்குகள் மற்றும் 4 பெண்கள் உள்ளடங்க இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 84 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். 


Post a Comment

Recent News

Recent Posts Widget