Ads (728x90)

வெள்ளை சீனி, வெல்லம் இவை இரண்டுமே கரும்பில் இருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. இதில் வெல்லத்தை நாம் எவ்வளவு எடுத்துக்கொண்டாலும் நம் உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காது.

அதே நேரத்தில் வெள்ளையாக வர வேண்டும் என்பதற்காக அதிகளவில் இரசாயனம் சேர்த்துத் தயாரிக்கப்படும் வெள்ளை சீனி உடலுக்குப் பலவிதத்தில் தீங்கை  விளைவிக்கின்றது.

உண்மையில் நம்முடைய உடல் எடை அதிகரிக்கவும், தொப்பை உருவாவதற்கும் இந்த வெள்ளை சீனியே முக்கியக் காரணியாகத் திகழ்கின்றது. 

அதிலும் தேனீர், காப்பி, சோடா, குளிர்பானங்கள், இனிப்பு வகைகள் போன்றவற்றின் மூலம் அதிகளவில் வெள்ளை சீனியை எடுத்துக் கொள்வதுடன் போதிய  உடற்பயிற்சியைச் செய்யாமல் இருந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து நீரழிவு நோய் ஏற்படுகின்றது.

சோடா, குளிர்பானங்கள் போன்ற சர்க்கரை நிறைந்த பானங்களை முற்றிலும் தவிர்த்து விட்டு அவற்றுக்குப் பதிலாக அதிகளவில் தண்ணீர் பருகுங்கள். காலையில் வெறும் வயிற்றில், ஒரு லிட்டர் தண்ணீரைப் பருகுவது வயிற்றில் உள்ள கழிவுகளை அகற்றிவிடும். 

மேலும் இரத்தத்தில் உள்ள கெட்ட கழிவுகள் வெளியேறவும் உதவும். சராசரியாக நாள் ஒன்றுக்கு நாம் 3 லிட்டர் தண்ணீர் பருகுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


Post a Comment

Recent News

Recent Posts Widget