தனது ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு விதமான நடிப்பை வெளிப்படுத்தும் மம்மூட்டியின் நடிப்பு திறமைக்கு இந்த படமும் ஒரு எடுத்துக்காட்டாக வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த படத்தில் வில்லனாக எதிர்மறை பாத்திரத்தில் நடித்திருக்கும் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
17-ம் நூற்றாண்டில் தெற்கு மலபார் வனப்பகுதிக்குள் வழிதவறி செல்லும் தேவன் (அர்ஜுன் அசோகன்) எப்படி மணக்கால் கொடுமன் பொட்டி (மம்மூட்டி) வீட்டை அடைகிறார். அங்கு கொடுமன் பொட்டியால் என்ன பிரச்னைகளை சந்திக்கிறார். மேலும் சென்ற முதல் நாள் முதலே என்ன விதமான மர்மங்களை எதிர்கொள்கிறார். அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார் என்ற ஒரு திகிலூட்டும் கதையை கருப்பு வெள்ளையில் இயக்கியிருக்கிறார் இயக்குநர் ராகுல் சதாசிவன்.
இதற்கு முன்னரும் அமானுஷ்யம் சார்ந்த படத்தை இயக்கியிருந்த இயக்குநர் ராகுல் சதாசிவன் அதன் சாயல் எதுவும் இதில் தெரியாமல், இதை வேறொரு பாணி திகிலூட்டும் படமாக எடுத்துள்ளார்.
Post a Comment