Ads (728x90)

வற் வரி ஏய்ப்பு தொடர்பில் டபிள்யூ.எம். மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 6 மாத கால சிறைத்தண்டனை விதித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா வற் வரியை செலுத்தாமைக்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

2023 ஒக்டோபர் 14ஆம் திகதி உரிய வரிகளை செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், உரிய தொகையை செலுத்தாத காரணத்தால் நீதவான் பிரதிவாதிகளுக்கு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அர்ஜுன் அலோசியஸ், அந்தனி ரன்தேவ் தினேன்ந்ர ஜோன், கே.பிரசன்ன குமாரசிறி டி சில்வா ஆகிய பிரதிவாதிகளுக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது பிரதிவாதி உரிய தொகையை செலுத்தாததால் நீதிமன்றம் இந்தத் தண்டனை விதித்தது.

2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா வற் வரியை செலுத்தாமைக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனை உத்தரவை ரத்து செய்யுமாறு கோரிய டபிள்யூ. எம். மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget