Ads (728x90)

தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்குமாறு நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சகல அதிகாரிகளும் கடமைகளுக்கு கண்டிப்பாக வருகை தருவது அவசியம் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.  

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தேர்தல் கடமைகளுக்கான நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ள அதிகாரிகள், கடமைக்கு வருகைதரத் தவறும் பட்சத்தில் ரூபா ஒரு இலட்சம் தண்டப்பணம் அறவிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அவர்களுக்கு இத்தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.   

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்திருக்காமை மற்றும் விண்ணப்பத்தை நிராகரித்திருந்தமை என்பவை தேர்தல் கடமைகளிலிருந்து விடுவிப்பதற்கான காரணமல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

தேர்தல் கடமைகளில் ஈடுபடும் சகல அதிகாரிகளும் சேவை நிலையத்துக்கு வருகை தந்த பின்னர் வருகைக்கான சான்றிதழை  நிறுவனத்தின் தலைவருக்கு சமர்ப்பிப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  

தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்காத அதிகாரிகள் நாட்டின் அரசியலமைப்புக்கு இணங்க, தேர்தல் ஆணைக்குழுவுடன் ஒத்துழைப்புடன் செயல்படுவதை நிராகரித்துள்ளதாக அல்லது அதற்கு தகுதி இல்லாத நபர் எனக் கணிக்கப்படுவார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget