Ads (728x90)

அடுத்த வாரம் முதல் அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3,000 ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இடைக்கால கொடுப்பனவான 3,000 ரூபா ஒக்டோபர் மாத ஓய்வூதியத்துடன் சேர்க்கப்படாமை தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி, அதே தொகையை அடுத்த வாரத்திற்குள் ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். 

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் நிதியமைச்சின் உயர் அதிகாரிகளுடன் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபா வழங்குவதற்கு 24/08/2024 திகதியிட்ட அரச நிர்வாக சுற்றறிக்கை இலக்கம் 02/2024 வெளியிடப்பட்ட போதிலும், அதற்கான நிதி எதுவும் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. 

இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இதற்கான நிதியை வழங்குமாறு நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget