Ads (728x90)

ஜனநாயக தமிழரசுக் கூட்டமைப்பு சுயேட்சை குழுவாக யாழில் இன்று காலை வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்,, முன்னாள் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் த.ஐங்கரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன், தமிழரசுக் கட்சியின் மகளிர் அணி செயலாளர் விமலேஸ்வரி, முன்னாள் போராளி வைத்திலிங்கம் பாலசுரேஷ் ஆகியோர் வேட்பு மனுவை இன்று முற்பகல் 11 மணியளவில் யாழ். தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கையளித்துள்ளனர்.

இன்றையதினம் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த தேசிய அரசியலில் இதுவரை இல்லாதவாறு பன்னாட்டு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை கொள்வனவு செய்து, நாடாளுமன்றத்தில் தங்களுக்கு ஆதரவான தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான களங்களை திறப்பதற்கு ஆரம்பித்திருக்கின்றன.

அதனை வெளிப்படுத்த வேண்டிய தேவை எமக்குள்ளது. அதன் அடிப்படையிலும் நாங்கள் இந்த தேர்தலில் ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு என்ற ரீதியில் களம் இறங்கி உள்ளோம் என அவர் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து வெளியேறியவர்கள் மற்றும் சில கட்சிகளையும் உள்ளடக்கி ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு என்னும் புதிய கட்சியை உருவாக்கிச் சுயேட்சைக் குழுவாக இத்தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget