Ads (728x90)

கடலை மாவை தண்ணீரில் நன்றாக குழைத்து முகத்தில் பூசி, அவை நன்றாக உலர்ந்த பின்பு குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் சருமம் பளிச்சென்று மின்னும்.

கடலை மாவுடன் தக்காளியை கூழாக குழைத்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுவது அதிக பொலிவு தரும்.

சருமம் எண்ணெய் பிசுபிசுப்புத்தன்மையுடன் இருந்தால் கடலை மாவுடன் தயிர், எலுமிச்சை சாறு கலந்து குழைத்து முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கி முகம் பொலிவு பெறும்.

முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிது தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வந்தால் முகச்சோர்வு நீங்கும்.

வெயிலின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க கடலை மாவுடன் ரோஸ்வாட்டர், பால் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முகம் என்றும் இளமையுடனும், பளபளப்பாகவும் இருக்கும்.


Post a Comment

Recent News

Recent Posts Widget