Ads (728x90)

நாடளாவிய ரீதியில் இவ்வருடத்தின் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்ற 1,818 வீதி விபத்துக்களில் 1,898 பேர் உயிரிழந்துள்ளதாகப் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பிரதி பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 1,818 வீதி விபத்துக்களில் 730 மோட்டார் சைக்கிள் விபத்துக்களும், 209 முச்சக்கரவண்டி விபத்துக்களும், 258 லொறி விபத்துக்களும், 146 பஸ் விபத்துக்களும், 118 வேன் விபத்துக்களும் அடங்குகின்றன.

மேலும் 42 வாகனங்களின் சாரதிகள் விபத்துக்களை ஏற்படுத்தி தப்பிச் சென்றுள்ளனர். வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்களில் 676 பேர் பாதசாரிகள் ஆவர்.

எனவே வீதிகளில் பயணிக்கும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget