கடந்த ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி தமிழகத்தின் நாகப்பட்டினம் - காங்கேசன்துறைக்கு இடையிலான சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் சேவை தொடங்கியது. முதலில் தினந்தோறும் இரு மார்க்கத்திலும் இயக்கப்பட்ட நிலையில் பயணிகள் முன்பதிவு குறைவாக இருந்ததால் வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு மூன்று நாட்களாக குறைக்கப்பட்டு இயக்கப்பட்டது. அதன் பின்னர் சனிக்கிழமை உட்பட்ட 4 நாட்களாக நீடிக்கப்பட்டது. இது பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்று முன்பதிவும் அதிகரித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து இனி வாரத்தில் 5 நாட்கள் கப்பலை சேவையை இயக்க கப்பல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி எதிர்வரும் 8ஆம் திகதி முதல் வெள்ளிக் கிழமைகளிலும் கப்பல் போக்குவரத்து சேவை இருக்கும் என கப்பல் போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.
Post a Comment