அதன்படி 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக 27, 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் உயர்தரப் பரீட்சையை நடத்துவதில்லை என முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. க.பொ.த.உயர்தரப் பரீட்சை மீண்டும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை தணிந்து வரும் போதிலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
இதுவரை வெளியிடப்பட்டுள்ள அட்டவணையின்படி டிசம்பர் 4 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவிருந்த பாடங்களுக்கான பரீட்சையே அன்றைய தினம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள் மீண்டும் இடம்பெறும் திகதிகள் பின்வருமாறு,
* நவம்பர் 27 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 21 திகதியும்
* நவம்பர் 28 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 23 திகதியும்
* நவம்பர் 29 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 27 திகதியும்
* நவம்பர் 30 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 28 திகதியும்
* டிசம்பர் 2 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 30 திகதியும்
* டிசம்பர் 3 நடைபெறவிருந்த பாடங்கள் - டிசம்பர் 31 திகதியும் நடைபெறும்.
இதேவேளை பொது அறிவுப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறும் எனவும், அன்றைய தினம் புதிய நேர அட்டவணை வேறு நிறத்தில் அச்சிடப்பட்டு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment