இன்று காலை திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 110 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழமான காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு கடற்கரையை அண்மித்து வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் நாளைய தினம் நாட்டின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வட மாகாணத்தில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை 11.30 மணி நிலவரப்படி திரிகோண மலையில் இருந்து கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
மேலும் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மணிக்கு சுமார் 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Post a Comment