இன்று காலை 7 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
இம்முறை வாக்களிப்பதற்காக ஒரு கோடியே 71 இலட்சத்து 40,354 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அடங்கலாக 690 குழுக்கள் போட்டியிடுகின்றன. அத்துடன் 8,361 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றில் 196 உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் ஊடாக தெரிவு செய்யப்படுவார்கள்.
2024 வாக்காளர் பட்டியலுக்கு அமைய சில மாவட்டங்களில் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை மாறுபட்டுள்ளது.
இதற்கமைய கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தலா ஒரு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களில் ஒவ்வொரு வேட்பாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
இதன்படி கம்பஹா மாவட்டத்தில் 19 உறுப்பினர்களாகவும் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் 11 உறுப்பினர்களாகவும் நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதேநேரம் யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவடைந்துள்ளது.
இன்று நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Post a Comment