Ads (728x90)

நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 45 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

தம்புள்ளையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் தடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.2 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களை பெற்ற போது போட்டியில் மழை குறுக்கிட்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் குஷல் மென்டிஸ் 143 ஓட்டங்களையும், அவிஷ்கா பெர்னாண்டோ 100 ஓட்டங்களையும் பெற்று ஒருநாள் போட்டியில் தமது 4ஆவது சதத்தினையும் பூர்த்தி செய்தனர். பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் ஜேகப் டவி 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

மழை குறுக்கிட்டதால் டக்வத் லூயிஸ் முறைப்படி நியூசிலாந்து அணிக்கு 27 ஓவர்களில் 221 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 27 ஓவர்கள் 09 விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்ற நிலையில் தோல்வியை தழுவியது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் வில் யங் அதிகபட்சமாக 48 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் டிஷான் மதுஷங்க 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget