போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. எனினும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மழை குறுக்கிட்டதால் போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 45.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்த 209 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
நியூசிலாந்து அணி சார்பாக மார்க் சப்மன் 76 ஓட்டங்களையும், மிச்செல் கேய் 49 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன மற்றும் ஜெப்ரி வெண்டர்சே தலா 3 விக்கட்டுக்களை கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து, 210 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 46 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்த வெற்றி இலக்கை அடைந்தது.
இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களையும், பெத்தும் நிஸ்ஸங்க 28 ஓட்டங்களையும், மஹீஸ் தீக்ஷன ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றனர்.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் மிச்செல் பிறேஸ்வெல் 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் ஊடாக ஒருநாள் தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில், 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.
Post a Comment