Ads (728x90)

கடவுச்சீட்டு பெறுவதற்காக புதிய இணையவழி முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி குடிவரவு குடியகல்வு இணையத்தளத்திற்கு பிரவேசித்து கடவுச்சீட்டைப் பெறுவதற்கு ஒரு திகதியை ஒதுக்கிக் கொள்ள முடியும் என பதில் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் டி எம் டி நிலுஷா பாலசூரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் புதிய இணையவழி  முறைமை அமுல்படுத்தப்படவுள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

இந்த இணையவழி முறைமை மூலம் எந்த நபருக்கும் நாளின் எந்த நேரத்திலும், எங்கிருந்தும் திகதி ஒன்றை முன்பதிவு செய்து கொள்ள முடியும். இந்த இணையவழி முறையை நவம்பர் 6ம் திகதி முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

எனவே திகதியை முன்பதிவு செய்யும் எதிர்பார்ப்புடன் நவம்பர் 6ஆம் திகதிக்குப் பிறகு பொதுமக்கள் வர வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.



 

Post a Comment

Recent News

Recent Posts Widget