Ads (728x90)

ஒரு சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவினாலும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள யாழ். போதனா வைத்தியசாலையில் தேவையான மருந்து கையிருப்பில் உள்ளது என யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அண்மையில் பெய்த மழையினால் யாழ். போதான வைத்தியசாலைக்குள் வெள்ள நீர் புகுந்தமையினால் ஒரு சில சிகிச்சை நிலையங்கள் மாற்று இடங்களுக்கு மாற்றப்பட்டு சிகிச்சைகள் தற்பொழுது வழமைக்கு திருப்பியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget