Ads (728x90)

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதி நாரஹேன்பிட்டி பகுதியில் மோதல் ஒன்றில் நபரொருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 6 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டி உத்யான வீதியில் மரண வீடொன்றில் இரு குழுக்களுக்கு இடையில் மோதலொன்று இடம்பெற்றுள்ளது. அதன்போது ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவருக்குக் காயத்தை ஏற்படுத்தியமை தொடர்பில் 8 பிரதிவாதிகளுக்கு எதிராகச் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவந்த காலப்பகுதியில் பிரதிவாதிகளில் இருவர் உயிரிழந்தனர். நீண்ட விசாரணைக்குப் பிறகு, பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவித்தார்.

அதன்படி குறித்த ஆறு பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதாகக் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே தமது தீர்ப்பில் அறிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget