Ads (728x90)

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பதவிப்பிரமாணத்திற்கு ஒதுக்கப்பட்டு பயன்படுத்தப்படாத 200 மில்லியன் ரூபா பணம் மக்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வள பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதி பதவிப்பிரமாண நிகழ்வுக்கு வரவு செலவுத் திட்டத்தில் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட அந்த பணம் பொதுநிதியில் வரவு வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் மக்கள் பிரதிநிதிகள் சம்பளம் பெற்றுக்கொண்டு சேவையாற்றுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் பொதுநிதியில் வைப்பிலிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

அக்மீமமன பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget